/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான மின் கம்பம் அகற்றிவிட்டு புதியதாக நட கோரிக்கை
/
சேதமான மின் கம்பம் அகற்றிவிட்டு புதியதாக நட கோரிக்கை
சேதமான மின் கம்பம் அகற்றிவிட்டு புதியதாக நட கோரிக்கை
சேதமான மின் கம்பம் அகற்றிவிட்டு புதியதாக நட கோரிக்கை
ADDED : மே 24, 2024 06:48 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., சங்காயிபட்டி காந்திநகரில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து, எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது.கோடை மழை பெய்து வருவதால், மின் கம்பம் முறிந்த விழுந்தால் மேய்ச்சலுக்கு செல்லும் கால் கடைகளுக்கும், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, சேதமான மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் நட வேண்டும்.இதுகுறித்து பஞ்., தலைவர் அடைக்கலம் கூறுகையில்,''சேதமான மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பம் நட வேண்டும் என, மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்துள்ளேன். அதற்கு அவர், விரைவில் புதிய மின் கம்பம் மாற்றி தரப்படுவதாக கூறினார்,'' என்றார்.