ADDED : மார் 22, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை
அடுத்த கொடுங்கால் வடிகால் வாய்க்காலில் வளர்ந்துள்ள முற்செடிகள்,
ஆகாய தாமரைகளை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.கடந்தாண்டு
நீர்வளத்துறை சார்பில், சரிவர துார் வாராததால் மண் சரிவு ஏற்பட்டும்,
முற் செடிகள், ஆகாய தாமரைகள் வளர்ந்தும் உள்ளது.இதனால் தண்ணீர் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல், விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது.
இதனால்
பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விவசா-யிகளின் நலன்
கருதி கொடுங்கால் வடிகால் வாய்க்காலில், வீர-வள்ளி கிராமத்தில் இருந்து
வதியம், கோட்டைமேடு, பரளி, மேட்டுமருதுார், குமாரமங்கலம்
வழியாக பெட்ட-வாய்த்தலை வரை துார் வார வேண்டுமென விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
