தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அணை பகுதியில் பரவியுள்ள மரங்களை அகற்ற கோரிக்கை

அணை பகுதியில் பரவியுள்ள மரங்களை அகற்ற கோரிக்கை

அணை பகுதியில் பரவியுள்ள மரங்களை அகற்ற கோரிக்கை


ADDED : மே 06, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, சாந்தப்பாடி செல்லாண்டியம்மன் அணையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சாந்தப்பாடி பகுதியில் செல்லாண்டியம்மன் அணை அமைந்துள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையில், ஆண்டு

தோறும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளுக்கு பெரும் பயனளித்து வருகிறது.

ஆனால், அணையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக பரவியுள்ள சீமை கருவேல மரங்கள் காரணமாக, அங்கு நரி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால், அருகிலுள்ள பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்

கவலையில் உள்ளனர்.

கருவேல மரங்களின் அடர்ந்த பகுதிகளில் நரிகள் தஞ்சம் அடைந்து, அருகிலுள்ள ஆடுகளை தாக்குவதால், விவசாயி

கள் செம்மறி ஆடுகளை வளர்ப்பதில் தயக்கம் கொள்வதற்கும், வருமான இழப்பை சந்திப்பதற்கும் வழி வகுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, செல்லாண்டியம்மன் அணையை சுற்றியுள்ள சீமை கருவேல மரங்களை, போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us