தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை

வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை

வாய்க்காலில் அடைத்துள்ள கழிவுகளை அகற்ற கோரிக்கை


ADDED : மார் 23, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர், இரட்டை வாய்க்காலில் குவிந்துள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலாக ஒரு காலத்தில் இருந்த இரட்டை வாய்க்கால், கரூர் நகரில், 12 கிலோ மீட்டர் வரை செல்கிறது. அதில், தற்போது சாக்கடை கழிவு கலந்து செல்கிறது. ரத்தினம் சாலை முதல், மக்கள் பாதை வரை, வாய்க்காலில் கான்-கிரீட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரட்டை வாய்க்காலில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் வாய்க்கால் பகு-தியில் வசிக்கும் பொதுமக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் அபாயமும் உள்ளது. எனவே, கரூரில் இரட்டை வாய்க்காலில் தேங்கியுள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us