/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி மையத்தை மறு சீரமைக்க கோரிக்கை
/
அங்கன்வாடி மையத்தை மறு சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2025 07:41 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, 3வது வார்டு வடக்கு தெருவில், கடந்த, 1994ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
அங்கன்வாடி மையத்தை சுற்றி, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குழந்தைகள், இங்கு தொடக்கக் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சொந்த கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்ததால், தனியார் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்தனர்.
ஆனால், தற்போது வரை, அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவில்லை. மேலும் அங்கன்வாடி மையத்தின் முன் சீமை கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. 30 ஆண்டுகளாக தொடக்க கல்விக்கு பயன்பட்டு வந்த இந்த அங்கன்வாடி மையம், தற்போது முட்புதர்போல் காட்சியளிப்பது வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து கல்வி பயிலும், அங்கன்வாடி மையத்தை விரைவில் மறுசீரமைத்து சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.