ADDED : ஏப் 25, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அருகேயுள்ள கருப்பத்துார், திம்மாச்சிபுரம், கே.பேட்டை, குறப்பாளையம், வதியம், நடுவதியம், மணத்தட்டை, சங்கிலிராயன் தெரு, நாப்பாளையம் கடம்பர் கோவில், பெரியபாலம், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் வழியாக பெட்டவாய்த்தலை வழியாக செல்லும் தென்கரை பாசன வாய்க்கால் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்குள்ள படித்துறை கற்கள் பெயர்ந்து சேதம் ஏற்பட்டு உள்ளது.
படித்துறையில் குளிக்கும்போது, சேதம் ஏற்பட்ட இடைவெளியில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பொது மக்கள் நலன் கருதி சேதம் ஏற்பட்டுள்ள படித்துறைகளை சரி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
