/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை
/
பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை
ADDED : டிச 23, 2025 05:25 AM
அரவக்குறிச்சி: க.பரமத்தி அருகே வைரமடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.
பரமத்தி அருகே வைரமடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மின்கம்பம் வலுவி-ழந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே, விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், நடைபயணிகள் உள்ளிட்டோர் இந்த வழியாக தினமும் சென்று வரும் நிலையில், மின்கம்பம் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என அச்சம் நிலவுகிறது. மேலும், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள், பலமுறை தென்னிலை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கையும் மேற்-கொள்ளப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், பொதுமக்கள் நலன் கருதி, மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடி ஆய்வு மேற்கொண்டு, வலுவிழந்த மின்கம்-பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

