விலாசம் தெரியாத மூன்று சடலங்களை கரூருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை
விலாசம் தெரியாத மூன்று சடலங்களை கரூருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை
ADDED : ஜன 23, 2026 04:17 AM
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனையில், விலாசம் தெரியாத மூன்று சடலங்களை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, குளித்தலை, தரகம்பட்டி, மணப்பாறை, தோகைமலை, காவல்காரன்பட்டி நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரி-ழப்பு மற்றும் மின்சாரம், தீ விபத்து, தற்கொலை உள்ளிட்ட கார-ணங்களால் உயிரிழப்பவர்களின் உடல்கள், குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்படுகிறது.இங்குள்ள குளிரூட்டப்பட்ட அறையில், நான்கு சடலங்களை மட்டுமே பாதுகாக்க முடியும். மற்ற உயிரிழப்பு உடல்கள் அனைத்தும் கரூர், திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில், விலாசம் தெரியாத மூன்று ஆண் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளை, பிரேத பரி-சோதனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனர் செழியன் கூறுகையில்,'' குளித்தலை அரசு மருத்துவமனை சவக்-கிடங்கில், மூன்று அடையாளம் தெரியாத சடலங்கள் இருப்பது, தாங்கள் சொல்லி
தான் தெரிய வருகிறது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
