/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மஞ்சப்பை' இயந்திரம் அமைக்க வேண்டுகோள்
/
'மஞ்சப்பை' இயந்திரம் அமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 23, 2025 05:28 AM
அரவக்குறிச்சி: தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மஞ்-சப்பையை பயன்படுத்த கோரி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்காக, மஞ்சப்பை தரும் தானியங்கி இயந்-திரம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில், இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை, புவி வெப்ப மயமாதலைத் தடுக்க, வெப்ப மண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தை காப்பாற்ற, நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க, தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அரவக்குறிச்சியில், நெகிழிப்பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பத்து ரூபாய் நாணயம் போட்டால், தானாக வழங்கக்கூடிய மஞ்சப்பை இயந்திரத்தை அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்திலும், டவுன் பஞ்., அலு-வலகத்திலும் நிறுவி சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்பு-ணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

