ADDED : அக் 05, 2026 05:30 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இதில் வாலிபர்கள், இளைஞர்கள்
மற்றும் நடுத்தர வயதினர் பெரும்பாலும் விளையாட்டு பிரியர்களாகவே
இருந்து வருகின்றனர். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு என்று
அரவக்குறிச்சியில் தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. மேலும்,
அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு
மைதானம், மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.விளையாட்டு
மைதானம் இல்லாததால் தனியார் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று
இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இதேபோல் வயதான முதியவர்கள் மற்றும்
நடுத்தர வயதினர், சர்க்கரை நோய் உள்ளவர்கள், காலை நடைபயிற்சி
மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால் பொது சாலையை பயன்படுத்தி
வருகின்றனர்.
பொது சாலையை பயன்படுத்தும்போது காலை நேரங்களில் ஒரு
சில சமயம் விபத்து நடந்து விடுகிறது. இதை கருத்தில் கொண்டு புதிய
விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில் உள்ள மைதானத்தை பொது பயன்பாட்டிற்கோ அளிக்க வேண்டும் என,
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
