/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலவச வீட்டுமனை பட்டா சப்-கலெக்டரிடம் கோரிக்கை
/
இலவச வீட்டுமனை பட்டா சப்-கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2025 02:12 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., கூடலுார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள, 30 சதவீதம் பேர், அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா பெற்றுள்ளனர். மீதமுள்ள, 70 சதவீதம் குடியிருப்புகளுக்கு, பட்டா இல்லாமல் உள்ளது. இதனால், அரசு குடியிருப்பு பெறவும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீயிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல், தாசில்தார் இந்துமதியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.