/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அஞ்சல் கோட்ட ஆதார் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டுகோள்
/
கரூர் அஞ்சல் கோட்ட ஆதார் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டுகோள்
கரூர் அஞ்சல் கோட்ட ஆதார் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டுகோள்
கரூர் அஞ்சல் கோட்ட ஆதார் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டுகோள்
ADDED : செப் 24, 2024 01:09 AM
கரூர்: 'கரூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள, 33 ஆதார் சேவை மையங்-களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்' என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் அஞ்சல் கோட்-டத்தில், 33 ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சேவை கரூர் மற்றும் குளித்தலை தலைமை தபால் நிலை-யங்களில் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஞாயிறு உள்பட, அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. புதி-தாக ஆதார் பதிவு செய்ய கட்டணம் இல்லை.
ஐந்து மற்றும், 15 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை. பெயர், முகவரி, மொபைல் எண், மின் அஞ்சல், முகவரி திருத்தம் செய்ய, 50 ரூபாயும், பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கு,
100 ரூபாய் கட்டண-மாக செலுத்த வேண்டும்.குழந்தைகளுக்கு, புதிய ஆதார் பதிவு செய்ய, குழந்தையுடன் வரும் தாய் அல்லது தந்தை தங்களின் அசல் ஆவணங்களுடன், குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும். மொபைல் எண், மின்னஞ்சல் திருத்தம் செய்ய ஆவணங்கள் தேவையில்லை. மற்ற திருத்தங் களுக்கு ஆவணம் தேவை. செல்லதக்க ஆவணங்களின் பட்டியல் hhtps:/uidai.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது.எனவே, பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு, அஞ்சலக சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

