/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்ணிடம் செயின் பறித்தவருக்கு காப்பு
/
பெண்ணிடம் செயின் பறித்தவருக்கு காப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:29 AM
குளித்தலை, பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
குளித்தலை அடுத்த, வீரணம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி, 30. இவர் கடந்த, 20ம் தேதி இரவு 10:40 மணியளவில் தனது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு இருந்தார்.
அப்போது, கடவூரை சேர்ந்த ரஞ்சித்குமார், 28, என்பவர் தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்தார். அது அறுந்து கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பெண் கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை பிடித்து, சிந்தாமணிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தமிழ்ச்செல்வி கொடுத்த புகார்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.