/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் திருட்டு வாலிபருக்கு காப்பு
/
குடிநீர் குழாய் திருட்டு வாலிபருக்கு காப்பு
ADDED : ஜூன் 10, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், குடிநீர் குழாய்களை திருடியதாக வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர், வையாபுரி நகர் ஏ.வி.டி., கார்னர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார், 34. இவர், வணிக நிறுவனத்தில், 6,000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் குழாய்களை வைத்திருந்தார்.
கரூர் சர்ச் கார்னர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், 36, என்பவர் கடந்த, 8ல், குழாய்களை திருடியுள்ளார்.
இது குறித்து, தினேஷ்குமார் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விஜயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.