ADDED : ஜன 01, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் இந்துமதி தலைமையில், துணை தாசில்தார் ஜெயவேல்காந்தன், மண்டல துணை தாசில்தார் சித்ரா ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது, ஆதிதிராவிடர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டா வழங்குவது தொடர்பாகவும் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களின் பணிப்பதிவேடு கணினியில் பதிவு செய்வது குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.ஐ.,க்கள் தமிழரசி, பானு, முத்துக்கண்ணு மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

