ADDED : மார் 22, 2026 07:46 AM
ஈரோடு:தமிழ்நாடு
வேளாண் பல்கலை கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், ஒவ்வொரு
ஆண்டும் உயர் விளைச்சல் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகிறது.
இதன்படி
பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பு பருவத்தில், நெல்
பயிரில் கோ.51 (1 ஏக்கர்), ஏ.டீ.டி.59 (2.5 ஏக்கர்), மக்காசோளம் வி.ஐ.எம்
(0.5 ஏக்கர்), உளுந்து வி.பி.என்.9 (1.75 ஏக்கர்), வி.பி.என்.10 (1.5
ஏக்கர்), நிலக்கடலை வி.ஆர்.ஐ.10 (1.5 ஏக்கர்) ஆகிய ரகங்கள் வல்லுனர்
நிலை விதை பண்ணைகள் அமைக்கப்பட்டு, விதைப்பயிர் பூக்கும் பருவம்,
அறுவடை நிலையில் உள்ளன.
இப்பண்ணையை ஈரோடு விதை சான்றளிப்பு
மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ், விதை
சான்றளிப்பு அலுவலர் ஜெயகுமார், தனஜெயந்தி ஆய்வு செய்தனர். தரமான
விதைகளை உற்பத்தி செய்ய யோசனை தெரிவித்தனர்.v
