/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக மாறினால் வசிக்கலாம்'
/
'கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக மாறினால் வசிக்கலாம்'
'கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக மாறினால் வசிக்கலாம்'
'கோவில் நிலங்களில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக மாறினால் வசிக்கலாம்'
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கரூர்: ''கோவில் நிலங்களில் வசிப்பவர்கள், வாடகைதாரர்களாக மாறினால், கோவில் நிலத்தில் வசிக்க முடியும்,'' என, திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமாக, ஐந்தரை லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக, சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 4.78 லட்சம் ஏக்கர் இருப்பதாக சொல்கின்றனர். மீதமுள்ள நிலங்கள் குறித்து தெரியவில்லை. கோவில் நிலங்களில் வசிப்பவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோவில் நிலத்தில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக மாறினால், கோவில் நிலத்தில் வசிக்க முடியும்.
கடந்த, 2011ல், கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்கள் குறித்து, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தினோம். கோவில் சொத்துக்களை பணம் கொடுத்து, ஏமாற வேண்டாம். கரூர் மாநகராட்சி பகுதியில், கடந்த ஆட்சியிலும், தற்போதும் அரசியல் தலையீடுகள் இல்லை. ஆனால், சில ஓய்வு பெற்ற அதிகாரிகள், கோவில் நிலத்தில் வசிப்பவர்களை தவறாக வழி நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சட்டப்படி மீட்கப்படும். அரசு அலுவலர்கள், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகள் போடவும் நட வடிக்கை எடுக்கப்படும். ஒரு சில அரசு அதிகாரிகளால், அறநிலையத்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

