/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய சமுதாய கூடம் கட்ட பஞ்., கூட்டத்தில் தீர்மானம்
/
புதிய சமுதாய கூடம் கட்ட பஞ்., கூட்டத்தில் தீர்மானம்
புதிய சமுதாய கூடம் கட்ட பஞ்., கூட்டத்தில் தீர்மானம்
புதிய சமுதாய கூடம் கட்ட பஞ்., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : பிப் 13, 2025 03:06 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூட்டரங்கத்தில் நேற்று காலை அவசர கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்த-லைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு முன்னிலை வகித்-தனர். தீர்மானங்களை அலுவலக பணியாளர் முத்துக்குமார் வாசித்தார். கூட்டத்தில் வரவு, செலவு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பணிக்கம்பட்டி வாரச்சந்தையில்
சுற்றுப்பகுதி கிராம மக்கள், இல்லற நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் செய்து கொள்ளும் வகையில், புதியதாக சமுதாய கூடம் கட்ட வேண்டும் என, அனைத்து கவுன்சிலர்களும் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கான பணிகள் தலைவர், செயல் அலுவலர் மூலம் துறை சார்ந்த அலுவலர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., நிதியின் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்கள். சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

