/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்
/
உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்
உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்
உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்
ADDED : நவ 05, 2024 01:54 AM
உபரி நீரை குழாய் மூலம் ஏரிக்கு
கொண்டு வர வலியுறுத்தி தீர்மானம்
குளித்தலை, நவ. 5-
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வறட்சி பகுதி விவசாயிகள் அமைப்பின் தலைவர் காரைக்குடி அழகப்பன் தலைமை வகித்தார். விவசாயிகள் அழகப்பன், செல்வம், மணி, சரவணன், சுரேஷ், ரவிச்சந்திரன், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் வீரணம்பட்டி நாகராஜன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இக்கூட்டத்தில், காவிரி உபரி நீரை பஞ்சப்பட்டி ஏரி மற்றும் கடவூர் வட்டத்தில் உள்ள பொன்னனியாறு அணை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கும் மற்றும் கண்ணுத்து ஏரி வரை உள்ள ஏரி, குளங்களுக்கு நீரை நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட வேண்டும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க, வறட்சியின் கோரப்பிடியில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி உபரி நீரை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஜன., 21ல் கரூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொறுப்பாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.