/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 08, 2025 01:37 AM
கரூர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, பார்சலுக்கு பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளா
ர்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்சலுக்கு பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில், பெரிய உணவகங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு, 50,000 ரூபாய் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
இம்மாத இறுதிக்குள், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் கூடுதல் கட்டடத்தில் உள்ள அறை எண்-66ல், உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.