ADDED : மார் 28, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே நெரூர் சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது.
வாய்க்கால் மேல் உள்ள பாலத்தின், இருபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் தடுப்பு சுவர் இடிந்து விட்டது. புதிதாக தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இதனால், அந்த வழியாக, இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் தவறி வாய்க்காலில் விழுகின்றனர். இதனால், வாய்க்கால் மேல் பகுதியில் உள்ள, பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் கட்ட, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

