/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 22, 2025 01:29 AM
கரூர், கரூரில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் தனலட்சுமி, முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக, மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் மயூரி, மாவட்ட செயலாளர் தேவிகா, மாவட்ட இணை செயலாளர் வெண்ணிலா, மாவட்ட பொருளாளர் சுஜித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வெங்கடேசன், திருச்சி மாவட்ட தலைவர் கணேசன், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.