/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கரூரில் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கரூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2025 01:33 AM
கரூர், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள, 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கலைக்கப்பட்ட, 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைக்க வேண்டும் உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் வருவாய்த் துறையினர் ஈடுபடுவதால், பல்வேறு வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர்
பங்கேற்றனர்.