/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கம்பு பயிர் சாகுபடி தீவிரம்
ADDED : மே 23, 2025 01:13 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், பரவலாக கம்பு பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, அந்தரப்பட்டி, மலையாண்டிப்பட்டி, தேசிய மங்களம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கம்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கம்பு பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது கம்பு வளர்ச்சி பெற்றுள்ளது. விவசாய கூலி தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்யப்படுகிறது. கம்பு சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. குறைந்த செலவில், மகசூல் பாதிப்பு இன்றி இருப்பதால் விவசாயிகள் கம்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடந்துள்ளது.