/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெல் அறுவடை பணி தொழிலாளர்கள் மும்முரம்
/
நெல் அறுவடை பணி தொழிலாளர்கள் மும்முரம்
ADDED : பிப் 12, 2026 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வயலுார் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களில், அறுவடை பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வயலுார், சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி, தேவசிங்கப்பட்டி, திருமேனியூர் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆந்திரா பொன்னி, அட்சயா பொன்னி ரக சாகுபடி நடந்துள்ளது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. வயல்களில் நெற்கதிர்கள் விளைச்சல் கண்டுள்ளது. இவற்றை டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் நடக்கிறது.

