/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் நான்கு கட்டமாக ரிங் ரோடு பணி நடக்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
/
கரூரில் நான்கு கட்டமாக ரிங் ரோடு பணி நடக்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கரூரில் நான்கு கட்டமாக ரிங் ரோடு பணி நடக்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கரூரில் நான்கு கட்டமாக ரிங் ரோடு பணி நடக்கும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
கரூர்: ''கரூரில், நான்கு கட்டமாக ரிங் ரோடு பணிகள் நடக்கும்,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், நெரூர், உன்னியூர் உயர்மட்ட பாலம், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா பணி, கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி ஆகிவற்றை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டம், உன்னியூருக்கும், கரூர் மாவட்டம், நெரூருக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே, 92.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்டபாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பாலம் காட்டுப்புத்துார், உன்னியூர் சாலையில் துவங்கி, கரூர் நெரூர் சாலையில் முடிவடைகிறது. இப்பாலத்தின் நீளம், 1,092 மீட்டரும், அகலம், 12.90 மீட்டர் அளவில் கட்டப்படுகிறது. இதுவரை, 90 சதவீதம் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.
கரூரில் சுற்றுவட்ட சாலை பணிகள், கோவை சாலை தண்ணீர் பந்தலிலிருந்து தொடங்கி ஈரோடு சாலை குட்டக்கடை வழியாக மாங்காசோளிபாளையம், மண்மங்கலம், வாங்கல் சாலை வழியாக, 16 கால் மண்டபம் பிரிந்து கோயம்பள்ளி மேலப்பாளையம் பாலம் வழியாக பொதுமக்கள் எளிதில் கரூர் கலெக்டர் அலுவலகம் செல்லலாம். இப்பணி, நான்கு கட்டமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12.14 ஏக்கர் பரப்பளவில் உணவு விடுதி, பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணியர் காத்திருப்பு அறை, உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி கமிஷனர் சுதா, நெடுஞ்சாலைத்தறை கோட்ட பொறியாளர் முருகானந்தம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

