/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்தவெளி கிணறுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
/
திறந்தவெளி கிணறுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 23, 2025 05:43 AM
கரூர்: கரூர் மாவட்ட கிராமங்களில், விவசாய பயன்பாட்டிற்காக தரைமட்ட கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றதால் கிணறுகளில் தண்ணீர் இல்லை.
பெரும்பாலான கிணறுகள், நீர்வற்றி பயன்பாடு இல்-லாமல் உள்ளன. இந்த பாதுகாப்பு இல்லாத திறந்தவெளியில் கிணறுகளில், மனிதர்கள், கால்நடைகள் தவறி விழுந்து உயிரி-ழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுபோன்ற கிண-றுகள் சாலையோரம் இருப்பதால், வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் சம்பவம் நடக்கிறது.அதை தடுக்கும் வகையில், அபாயகரமான முறையில் உள்ள தரைமட்ட கிணறுகள் குறித்து ஆய்வு செய்து, பாதுகாப்பு அம்-சங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், அவ்வப்போது கிணறுகளை மூடவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அதிரடி காட்டுவதோடு நிறுத்திக்கொள்கிறது. இதை உரிய முறையில் மூட உத்தரவிட வேண்டும். அவ்வாறு மூடாத நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.