/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலை அருகே குப்பை கொட்டுவதால் தொற்று அபாயம்
/
நெடுஞ்சாலை அருகே குப்பை கொட்டுவதால் தொற்று அபாயம்
ADDED : நவ 10, 2024 03:12 AM
அரவக்குறிச்சி: சீத்தப்பட்டி காலனி, தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சா-லையில், சீத்தப்பட்டி காலனி அமைந்துள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைக்கோவிலுார் ஊராட்சியை சேர்ந்த இப்பகுதியில், குப்பை தொட்டிகளோ, குப்பை அள்ளுவதற்கு துாய்மை பணியாளர்களோ பணியமர்த்தப்-படவில்லை.எனவே, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நெடுஞ்சாலை ஓரங்-களில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். மேலும் இவ்-வழியாக வாகனங்களில் செல்லும் சிலர், கோழி கழிவுகளை கொட்டி செல்வதால் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். குறைந்தபட்சம் குப்பை தொட்டிகளையாவது வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்-பார்க்கின்றனர்.