/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலைமை தபால் நிலையம் முன் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
/
தலைமை தபால் நிலையம் முன் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
தலைமை தபால் நிலையம் முன் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
தலைமை தபால் நிலையம் முன் தேங்கும் கழிவுநீரால் தொற்று அபாயம்
ADDED : ஜூலை 05, 2025 01:35 AM
கரூர், கரூர் தலைமை தபால் நிலையம் முன், சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும், 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். மேலும், தலைமை தபால் நிலையம் அருகே, போலீஸ் ஸ்டேஷன், ஓட்டல்கள், தங்கும் விடுதி கள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளது.
இந்நிலையில், தலைமை தபால் நிலையம் முன் பல நாட்களாக, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொற்று அபாயம் உள்ளது. எனவே, கரூர் மாநகராட்சி அதிகாரிகள், தலைமை தபால் நிலையம் முன், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.