/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ஏற்படும் அபாயம்
/
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ஏற்படும் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ஏற்படும் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 22, 2025 01:30 AM
அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி காலனியில், வடிகால் சரியான முறையில் துார்வாராததால், தேங்கி நிற்கும் கழிவு
நீர் மற்றும் குப்பையால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே, சீத்தப்பட்டி காலனியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 18 ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலை துறையினர் கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுத்துள்ளனர். தற்போது வடிகால் சிதலமடைந்தும், புதர்கள் மண்டியும் கிடப்பதால், கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு, கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது. சாலையில் குப்பை குவிந்து கிடப்பதால், அதிக துர்நாற்றம் வீசுவதால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கொடையூர் ஊராட்சி நிர்வாகம், உடனடியாக பழைய கழிவுநீர் வடிகாலை அகற்றி விட்டு, புதிய கழிவு
நீர் வடிகால் அமைக்க வேண்டும்.