/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
/
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
மினி பஸ் ஸ்டாண்டில் தேங்கிய கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
ADDED : மே 17, 2025 01:21 AM
கரூர், கரூர் மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில், சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. அதில், துர்நாற்றம் வீசுவதால்,
தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் மூலம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில், சாக்கடை கழிவுநீர் பல நாட்களாக தேங்கியுள்ளது.
மேலும், கரூரில் கோடை மழை பெய்து வரும் நிலையில், சாக்கடை கால்வாயில் இருந்து, தேங்கிய கழிவுநீர் சாலையில் மழை நீருடன் ஓடுகிறது. இதனால், மினி பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது.
மினி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில், தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.