/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோழி கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்
/
கோழி கழிவுகளால் தொற்று பரவும் அபாயம்
ADDED : ஜூலை 01, 2025 01:04 AM
கரூர், கரூர் அருகே, கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகளால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வழியாக, ஏமூர் பஞ்., மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு, பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் சாலையின் இரண்டு பக்கமும், கோழி கழிவுகளை இரவு நேரத்தில் சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். அதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஏமூர் பஞ்., நிர்வாகம் உடனுக்குடன் அகற்றுவது இல்லை.
தற்போது, கரூர் வட்டார பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. அதில், கோழி கழிவுகள் நனைந்து, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள், கோழி கழிவுகளை இழுத்து சென்று சாலையில் போட்டு விடுவதால், பொது மக்கள் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டே ஷன் அருகே, கொட்டுப்பட்டுள்ள கோழி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.