ADDED : அக் 25, 2024 08:09 AM
ப.வேலுார்: நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, ப.வேலுாரில் இரும்பு உருக்கு ஆலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ப.வேலுார் வட்டம், இருக்கூர் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் பணி-யாற்றும் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் மாநி-லங்களை சேர்ந்த, 140 தொழிலாளர்கள் பணி-யாற்றுகின்றனர். அந்த நிறுவனத்தை, லீசுக்கு எடுத்து நடத்தி வருபவர்கள் கடந்த இரு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கடந்த வாரம் சாலை மறியல் செய்தனர்.
டி.எஸ்.பி., (பொ) முருகேசன், இன்ஸ்பெக்டர் இந்-திராணி, தாசில்தார் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அக்.,23ல் நிலுவையில் உள்ள சம்பள பணத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், பேச்சு-வார்த்தையின்படி ஆலை நிர்வாகத்தினர் பணம் வழங்கவில்லை. இதையடுத்து, இரண்டு மாத சம்-பளத்துடன் தீபாவளி போனசும் சேர்த்து வழங்க கோரி, வடமாநில தொழிலாளர்கள் நேற்று மாலை, 5:30 மணிக்கு ப.வேலுார்-சேலம் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் முத்துக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்காக அவர்களை தாலுகா அலு-வலகம் அழைத்து சென்றனர்.