/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீண்டாமை சுவரை அகற்ற கோரி சாலை மறியல்
/
தீண்டாமை சுவரை அகற்ற கோரி சாலை மறியல்
ADDED : ஜூலை 12, 2025 01:21 AM
கரூர், கரூர் அருகே, தீண்டாமை சுவரை அகற்ற கோரி, ஒரு பிரிவினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே முத்துலாடம்பட்டி பகுதியில், பல்வேறு பிரிவினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள நாடக மேடையை, அனைத்து பிரிவினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடக மேடை உள்ள பகுதியில், தீண்டாமை சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று ஒரு பிரிவினர் கரூர்-வெள்ளியணை சாலை, தான்தோன்றிமலை அரசு கல்லுாரி அருகே, திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, தான்தோன்றிமலை போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையை தீர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், அமைதியாக கலைந்து சென்றனர்.