ADDED : ஏப் 21, 2026 05:15 AM
குளித்தலை, ::குளித்தலை அருகே கீழவெளியூர் மதுரா நகரில், குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூர் மதுரா நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்கு கல்லடை ஊராட்சி சார்பாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாக மதுரா நகர் பகுதிக்கு குடிநீர் சரிவர செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில், நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
தோகைமலை ஒன்றிய ஆணையர் முத்துக்குமார், தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம், கல்லடை ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் மோகன் குமார் ஆகியோர் சாலை மறியல் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.அப்போது, மதுரா நகர் பகுதிக்கு உடனடியாக குடிநீர் விரிவாக்கம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
