தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/உயர்மட்ட பாலத்துக்கு சாலை அமைப்பதற்கான பணி ஆய்வு

உயர்மட்ட பாலத்துக்கு சாலை அமைப்பதற்கான பணி ஆய்வு

உயர்மட்ட பாலத்துக்கு சாலை அமைப்பதற்கான பணி ஆய்வு


ADDED : ஜூன் 20, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்துக்கு, சாலை அமைப்பதற்கான பணிகளை, கலெக்டர் முத்துக்குமரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், கோயம்பள்ளி -மேலப்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, 12.43 கோடி ரூபாய் மதிப்பில், பல ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தின் இரண்டு பகுதிகளிலும், இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.

இதனால், பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையின்படி, உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

அதற்காக நிலம் எடுப்பு பணிகளுக்கு, 3.20 கோடி ரூபாய், இணைப்பு சாலை பணிக்கு, 7.80 கோடி ரூபாய் என, 11 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நேற்று கலெக்டர் முத்துக்குமரன், உயர்மட்ட பாலத்துக்கு சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, டி.ஆர்.ஓ.,க்கள் விமல்ராஜ், ரம்யா (நிலம் எடுப்பு) கரூர் ஆர்.டி.ஓ., சத்தியபாலகங்காதரன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us