/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் உடைப்பால் சாலை சேதம் வெள்ளியணையில் வாகன ஓட்டிகள் திணறல்

ADDED : ஏப் 20, 2025 01:46 AM
கரூர்:
கரூர் திண்டுக்கல் சாலை வெள்ளியணை கடைவீதியில் வழியாக காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் செல்கிறது. கடந்த மாதம் தனியார் வங்கி அருகில் ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டது. அந்த குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு குழியை மூடி விட்டனர். சேதமடைந்த சாலையை சீரமைக்காத காரணத்தால் குண்டும், குழியுமாக இருப்பதால் பஸ், கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் உள்ள கல், மண் அனைத்தும் வாகன ஓட்டிகள் மீது பறந்து விழுகிறது.
சில நேரங்களில் புழுதி கிளம்பி எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். மாலை நேரங்களில் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்கள் முழுவதும் புழுதி மண்டலமாக மாறுவதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கரூர், திண்டுக்கல் செல்ல முக்கிய சாலை என்பதால் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சாலை தொடர்ந்து சேதமாகி வருகிறது. சேதமடைந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.