/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் ஓடியதால் சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கழிவுநீர் ஓடியதால் சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கழிவுநீர் ஓடியதால் சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கழிவுநீர் ஓடியதால் சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 31, 2024 12:04 AM
கரூர், ஜூலை 3௧- கரூர் அருகே சாலையில், கழிவு நீர் நேற்று காலை ஆறாக ஓடி-யது.
இதனால் ஏற்பட்ட குண்டும், குழியுமான சாலையில் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.கரூர் அருகே கொளந்தானுார் அம்மன் நகரில், 500க்கும் மேற்-பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்-டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. அதில், அம்மன் நகர் பகு-தியை சேர்ந்த பொதுமக்கள், தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்-நிலையில், தொட்டியில் உள்ள குழாய் உடைந்ததால், கழிவுநீர் நாள்தோறும் சாலையில், ஓடிய வண்ணம் உள்ளது. இதனால், சாலையும் குண்டும், குழியுமாக மாறி விட்டது. அதில், தண்ணீர் தேங்கி நிற்பதால், அம்மன் நகரில் கொசு உற்பத்தியும் அதிகரித்-துள்ளதால், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், குண்டும், குழியுமாக உள்ள சாலையில் இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்லும் பொதுமக்கள், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சின்டெக்ஸ் தொட்டியை மாற்றி, புதிதாக தார்ச்சாலை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.