தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நபார்டு திட்டத்தின் ரூ.250 கோடியில் சாலை மேம்பாடு தி.மு.க., வேட்பாளர் இளங்கோ தகவல்

நபார்டு திட்டத்தின் ரூ.250 கோடியில் சாலை மேம்பாடு தி.மு.க., வேட்பாளர் இளங்கோ தகவல்

நபார்டு திட்டத்தின் ரூ.250 கோடியில் சாலை மேம்பாடு தி.மு.க., வேட்பாளர் இளங்கோ தகவல்


ADDED : ஏப் 20, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:''நபார்டு திட்டத்தின் கீழ், 250 கோடி ரூபாய் செலவில், 54 பஞ்.,களில் கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது,'' என, அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., வேட்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான இளங்கோ பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., வேட்பாளர் இளங்கோ, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பகுதிகளில், பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.அப்போது, அவர் பேசியதாவது:

கடந்த, 2021-26ல் அரவக்குறிச்சி தொகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில், வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அரவக்குறிச்சியில், 17.4 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கலைக்கல்லுாரி, 16.5 கோடி ரூபாய் மதிப்பில், முருங்கை பூங்கா வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. அதை தவிர, இல்லத்தரசிகள் விரும்பும் பொருட்களை வாங்கிக்கொள்ள, 8,000 ரூபாய் மதிப்பில், 'கூப்பன்' வழங்கப்பட உள்ளது.

நபார்டு திட்டத்தின் கீழ், 250 கோடி ரூபாய் செலவில், 54 பஞ்.,களில், கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், க.பரமத்தியில் வாரச்சந்தை, 50 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைதவிர, கூட்டு குடிநீர் திட்டம், பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள், சமுதாய கூடங்கள், பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வேண்டுகோள்படி கட்டப்பட்டுள்ளது.

தி.மு.க., அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிப்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது. சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு, ஐந்து லட்ச ரூபாய் மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், முதல்வன் படைப்பகம் அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தரும் கோரிக்கை மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனடியாக தீர்வு காணப்படும். அரவக்குறிச்சி தொகுதியில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் துார்வாரப்பட்டு, தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, இரண்டாவது முறையாக அரவக்குறிச்சி தொகுதியில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, என்னை மீண்டும் உதய

சூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

கிராமங்கள் அதிகம் கொண்ட, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியை, நகர்ப்புறங்களுக்கு இணையாக உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை கூட்ட தொடர் இல்லாத நேரங்களில், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் என்னை சந்தித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம்.

உங்களில் ஒருவனாக இருந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனைப்படி செயல்பட்டு, தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு கொண்டு வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஈசநத்தம் பஞ்., காக்காவாடி, சுக்கம்பட்டி, மணல்மேட்டுபட்டி, ஈசநத்தம் கடைவீதி, சீரங்காபுரம், நல்லம

நாயக்கன்பட்டி, முத்து கவுண்டனுார், நடூர், மணல் மேட்டுப்பட்டி உள்பட, 25க்கும் மேற்பட்ட பகுதிகளில், தி.மு.க., வேட்பாளர் இளங்கோ, பொதுமக்களிடம் ஓட்டு

சேகரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us