ADDED : ஆக 10, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மருதுார் டவுன் பஞ்., ரயில்வே குகை வழிப்பாதையில் இருந்து
மருதுார்- மேட்டுமருதுார் பணிக்கம்பட்டி செல்லும் சாலையின்
இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து சாலையை குறுக்கி
வருகின்றனர்.
இதனால் சாலையை விரிவாக்கம் செய்ய முடியாமல், வாகன
ஓட்டிகள் பாசன கண்ணாரில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சாலை
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இரு புறங்களில் உள்ள பாசனக்கண்ணாறு
அருகே கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
