/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண்ணமுத்தாம்பட்டியில் சாலை விரிவாக்க பணி
/
கண்ணமுத்தாம்பட்டியில் சாலை விரிவாக்க பணி
ADDED : நவ 22, 2025 01:57 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கண்ணமுத்தாம்பட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி கிராம வரை நெடுஞ்சாலை நிர்வாகம் சார்பில், நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், சாலை ஒருபுறம் முழுவதும் பொக்லைன் இயந்திரம் கொண்டு பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், பறிக்கப்பட்ட சாலையோரம் ஜல்லிக்கற்கள் கொண்டு நிரவும் பணி நடக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும், சாலை மேற்புறம் பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணி மூலம் மகாதானபுரம், பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து வாகனங்கள் எந்த விதமான சிரமும் இன்றி செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலை விரிவாக்க பணியில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

