/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை
/
மோசமான நிலையில் சாலை: வாகன ஓட்டிகள் அவஸ்தை
ADDED : டிச 03, 2025 07:49 AM
கிருஷ்ணராயபுரம் : சிந்தலவாடி சாலை, மேடு பள்ளமாக மாறி விட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்பட்டி பிரிவு சாலை முதல், பிள்ளபாளையம் வரை மங்கம்மாள் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் விவசாய நிலங்கள், அய்யர்மலை பகுதிகளுக்கு செல்கின்றனர்.
சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. சில இடங்களில் மேடு பள்ளமாக மாறி விட்டது. சாலை வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகிறது அப்போது வாகன ஓட்டிகள், தடுமாறி விழுகின்றனர். எனவே, மோசமான சாலையை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

