ADDED : மே 23, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:வீரகுமாரன்பட்டியில், மண் அரிப்பு காரணமாக மோசமான நிலையில் சாலை உள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் மங்கம்மாள் சாலை முதல் வீரகுமாரன்பட்டி வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக, கிராம மக்கள் வாகனங்களில் வீரவள்ளி, அய்யர்மலை, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் வீரகுமாரன்பட்டி அருகே, சிறிய பாசன வாய்க்கால் செல்லும் வழியில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை குறுகிய நிலையில் உள்ளது. சாலை வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டுள்ள சாலையை சரி செய்ய, பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
