/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையின் தரம் குறித்து அரவக்குறிச்சியில் ஆய்வு
/
சாலையின் தரம் குறித்து அரவக்குறிச்சியில் ஆய்வு
ADDED : நவ 11, 2025 01:56 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் இருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலை உறுதிப்படுத்தல் பணி முடிவடைந்த நிலையில், அதன் தரத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2023-24ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட, அரவக்குறிச்சியிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலை வரை, உறுதிப்படுத்தல் பணி முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், அந்த சாலையின் தரத்தை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார். அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், உதவி பொறியாளர் வினோத்குமார் உடனிருந்தனர்.

