ADDED : ஜன 06, 2026 06:39 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி
அருகே உள்ள ஆறு ரோடு முதல், புங்கம்பாடி செல்லும் சாலை உறுதிப்படுத்தல் பணி
முடிவடைந்த நிலையில், அதன் தரத்தை கரூர் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர்
நேரில் ஆய்வு செய்தார்.
அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலைத்துறை மூலம்
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025-26ம் ஆண்டு நிதி
திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
உட்கோட்டத்திற்குட்பட்ட, ஆறு ரோடு முதல் புங்கம்பாடி வரை 8 கி.மீ.,
செல்லும் சாலை, ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் உறுதிப்படுத்தல் பணி
முடிவடைந்தது. அதனை கரூர் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர்
கிருஷ்ணமூர்த்தி, சாலை அகலம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.
கரூர்
தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கார்த்தி-கேயன் மற்றும்
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட
பொறியாளர் சதாசிவம் மற்றும் உதவி பொறியாளர்கள் வினோத் குமார், அசாருத்தின்,
நிவேதா மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

