/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் பாதை சீரமைப்பு
/
கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் பாதை சீரமைப்பு
ADDED : ஜூலை 25, 2025 12:59 AM
கிருஷ்ணராயபுரம் ;மகிளிப்பட்டி, உடையான்தோட்டம் கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உள்ள மக்களுக்காக, பாதை சீரமைப்பு பணிகளில், மாயனுார் நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்பட்டி கிராமத்தில் இருந்து உடையான்தோட்டம் பகுதிக்கு, கட்டளை மேட்டு வாய்க்கால் கரை வழியாக பாதை செல்கிறது. வாய்க்கால் கரையில் அதிகமான புதர்கள், செடிகள் மண்டி வருவதால் மக்கள் நடந்து செல்லும் போது சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து இப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாயனுார் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று, நீர்வளத்துறை சார்பில் பொக்லைன இயந்திரம் கொண்டு உடையான்தோட்டம் செல்லும், கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் வளர்ந்த செடிகள், புதர்களை அகற்றி மக்கள் நடந்து செல்லும் வகையில் புதிய பாதை சீராமைப்பு பணிகள் நடந்தன.