/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தின்னப்பா நகர் விரிவாக்கத்தில் பாதியில் நிற்கும் சாலை பணி
/
தின்னப்பா நகர் விரிவாக்கத்தில் பாதியில் நிற்கும் சாலை பணி
தின்னப்பா நகர் விரிவாக்கத்தில் பாதியில் நிற்கும் சாலை பணி
தின்னப்பா நகர் விரிவாக்கத்தில் பாதியில் நிற்கும் சாலை பணி
ADDED : அக் 23, 2025 01:43 AM
கரூர், கரூர் தின்னப்பா நகர் விரிவாக்கதில், சாலை பணி பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில், 38வது வார்டு தின்னப்பா நகர் விரிவாக்க பகுதியில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இங்குள்ள மேல்நிலை தொட்டி அருகில், தெருவில் சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டிய பின் புதிதாக ஜல்லி கற்கள் நிரப்பி சாலை அமைக்க வேண்டும். ஆனால், பள்ளம் தோண்டிய நிலையில் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பணி முடிவு பெறாமல் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வழியில், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சேறும் சகதியுமான இருப்பதால், சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில், இடறி கீழே விழுகின்றனர். முடங்கிய பணிகளை மீண்டும் துவங்க, அதிகாரி
கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.