ADDED : ஜூன் 13, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர், செல்லாண்டிபாளையத்தில் உள்ள நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செவந்திலிங்கம் தலைமை வகித்தார். சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதி, ஆணை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். காலி பணியிடங்களை கிராமப்புற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பழனிசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.