ADDED : மே 06, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:மத்திப்பட்டி சாலை பிரிவில், வளர்ந்த முள் செடிகளை அகற்றும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி,
மத்திப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையை, நெடுஞ்சாலைத்துறை
மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது. இதில் மத்திப்பட்டி,
பாலப்பட்டி பிரிவு சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து
ஆக்கிரமித்துள்ளது.
இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்
சிரமப்பட்டனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை
பணியாளர்களை கொண்டு, முள் செடிகள் வெட்டி அகற்றி சாலை துாய்மை பணி
மேற்கொள்ளப்பட்டது.
