ADDED : ஆக 19, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
கரூர்:தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் செவிந்திலிங்கம் தலைமையில், செல்லாண்டிப்பாளையம் பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில்,
சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக
முறைப்படுத்த வேண்டும்; உயிரிழந்த சாலை பணியாளர்களின்
குடும்பத்துக்கு, கருணை வேலை வழங்க வேண்டும்; நெடுஞ்சாலைகளை
பராமரிக்க நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்
களுக்கு வேலை வாய்ப்பு
வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு சீருடை, சலவை படி வழங்க வேண்டும்
என்பன உள்பட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்,
மாவட்ட துணை தலைவர்கள் செல்வராசு, வி.பாலசுப்பிரமணி, செயலாளர்
எல். பாலசுப்பிரமணி, பொருளாளர் சிவக்குமார் உள்பட பலர்
பங்கேற்றனர்.
